மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 14:10 IST
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாசத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 152 வது தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சத்திய ஞான சபையில் இன்று கொடியேற்றப்பட்டது. சத்திய ஞான சபையை சுற்றியுள்ள பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசை தட்டுடன் சன்மார்க்க சங்க கொடி ஏந்தி சபையை சுற்றி வந்ததனர். சபையில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு தைப்பூச ஜோதி தரிசன விழா துவங்கியது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் நாளை காலை 6 மணிக்கு முதல் தைப்பூச ஜோத தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது
வாசகர் கருத்து