மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 15:41 IST
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். சாலை வியாபாரிகளிடம் அடிக்காசு வசூலிக்கும் வேலை செய்கிறார். நேற்றுமுன் தினம், பஸ் நிலையம் அருகில், வணிகர் வீதியில் பகல் நேரத்தில் டூ வீலரை நிறுத்தினார். சாவியை எடுக்காமல் அடிக்காசு வசூலிக்க சென்றார். நோட்டம் விட்ட மர்ம நபர், சில நிமிடங்களில் வண்டியை திருடிச் சென்றார். சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு, போலீசார் திருடனை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து