மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 15:49 IST
சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி அரசு பஸ் வந்தது. நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சீராவட்டம் பாலம் அருகே இன்று காலை வந்தபோது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க, பஸ் டிரைவர் முயன்றார். பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சில் பயணித்த 9 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படுகாயமடைந்த ஓட்டுநர் அன்பரசன், தெற்குப்பொய்கை நல்லூரைச் சேர்ந்த வசந்தி ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து