மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 16:11 IST
வேலுாரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்து ஸ்டாலின் சென்னை திரும்பிய 24 மணி நேரத்திற்குள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கலெக்டர்கள் அதிரடியாக துாக்கியடிக்கப்பட்டனர். ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டராகவும், திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா, சமூக பாதுகாப்புத்துறை இயக்குனராகவும், அங்கு இயக்குனராக பணியாற்றிய வளர்மதி, ராணிப்பேட்டை கலெக்டராகவும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். இந்த உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் அதிரடியாக டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து