மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 16:17 IST
சென்னையில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் கமிஷனுக்கு சட்டரீதியாக சில கடமைகள் உள்ளது. அதிமுக பிரச்சனையை அலசி பார்த்து கட்சி விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவது தேர்தல் கமிஷனின் கடமை. அந்த கடமையை செய்ய தேர்தல் கமிஷன் தவறியதுடன் தற்போது கோர்ட்டை கை கட்டுவது சட்டத்தை மீறிய செயல். தேர்தல் கமிஷன் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு சட்டத்திற்கு புறம்பானது. வட மாநிலங்களில் பாஜ எப்படிப்பட்ட செயல்பாடுகளை செய்தது. பாஜ நட்பு ஆட்சிகள் எப்படி கவிழ்ந்தன. அங்கு ஆட்சிகளை பாஜ எப்படி பிடித்தது என்பது தெரியும்.
வாசகர் கருத்து