பொது பிப்ரவரி 04,2023 | 18:19 IST
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஐயப்பன். தைப்பூசத்துக்கு ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலை வழங்குவதாக அறிவித்தார். ஜின்னா பாலம் அருகே இதற்கான டோக்கன் வழங்கினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. மூச்சுதிணறலால் பலர் மயக்கம் அடைந்தனர். நாகம்மாள், ராஜாத்தி, வள்ளியம்மாள், விமலா பலியாகினர். 20க்கும் மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார், தீயணைப்பு துறையினர் மீட்பு பணி செய்தனர். சம்பவம் குறித்து ஆர்டிஓ பிரேமலதா விசாரணை நடத்தி வருகிறார்.
வாசகர் கருத்து