மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 18:45 IST
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 49 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் சுமார் 60,000 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன கடந்த 4 நாட்களாக கனமழை பெய்தது. இதில் கோட்டூர் சுற்றியுள்ள கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்
வாசகர் கருத்து