மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 11:58 IST
திருச்சி உறையூர் சாலைரோட்டில் உள்ளது ஸ்ரீகுங்குமவல்லி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் கோயில் . இங்குள்ள அம்மன் ஸ்ரீகுங்குமவல்லி தாயார் வளைகாப்பு நாயகி என்று அழைக்கப்படுகிறார். வருடம்தோறும் இங்கு வளையல்காப்பு உற்சவம் 3 நாள் நடைபெறும். முதல்நாளான நேற்று குங்குமவல்லிதாயார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பெண்கள் பங்கேற்று அம்சனை தரிசனம் செய்தனர்
வாசகர் கருத்து