மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 00:00 IST
யிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அகீதாலயா என்ற பிளாஸ்டிக் கடை உள்ளது. திருஞானம் நடத்தி வருகிறார். கடையின் குடோன் சுவாமிநாத செட்டி தெருவில் உள்ளது. இந்த குடோ னில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தீ குடோன் முழுதும் பரவி அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் கூடிய கரும்புகை சூழ்ந்தது. சீர்காழி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. தீவிபத்துக்கான காரணத்தை சீர்காழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து