பொது பிப்ரவரி 05,2023 | 18:48 IST
கோவை, மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். வீட்டை பூட்டி விட்டு சென்ற போது, மர்ம ஆசாமி 9 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றான். சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்தனர். ஈரோட்டில் சாலையோரத்தில் கவிழ்ந்து கிடந்த பிக்கப் வாகனத்தில் ஒரு ஆசாமி அடிபட்டு கிடந்தான். போலீசார் சோதனை செய்த போது, வாகனத்தில் 9 சவரன் நகைகள் கிடந்தன. காயம் அடைந்தவன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சுந்தரவேல் என்பது தெரிந்தது. மேட்டுப்பாளையம் வீட்டில் நகை திருடியது சுந்தரவேல் தான் என்பது சிசிடிவி மூலம் உறுதியானது. நகைகளை திருடிய பிறகு பிக்கப் வாகனத்தை திருடியுள்ளான். தப்பிச் செல்வதற்காக வாகனத்தை வேகமாக ஓட்டியபோது சாலையோரத்தில் கவிழ்ந்துள்ளது. நகைகளை மீட்ட போலீசார் சுந்தரவேலை கைது செய்தனர்.
வாசகர் கருத்து