பொது பிப்ரவரி 05,2023 | 21:10 IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். குடிப்பழக்கம் கொண்ட காம்ப்ளி சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்தார். இந்நிலையில், அவர் மீது மனைவி ஆண்ட்ரியா பரபரப்பு புகாரை பாந்த்ரா போலீசில் அளித்து உள்ளார். நன்றாக குடித்து விட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். பாத்திரத்தை தூக்கி என் மீது வீசி அடித்தார். என் தலையில் காயம் ஏற்பட்டது. பேட்டை எடுத்து அடிக்க வந்தார். தடுத்து விட்டேன்; 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்; சம்பவம் நடந்த போது பிள்ளைகளும் உடன் இருந்தனர் என புகாரில் ஆண்ட்ரியா கூறியுள்ளார். பாந்த்ரா போலீசார் காம்ப்ளி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் காம்ப்ளி கைது செய்யப்படுவார் என மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: