மாவட்ட செய்திகள் பிப்ரவரி 06,2023 | 11:06 IST
வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மோகன், குடும்பத்துடன் நேற்று திருத்தணி சென்று, இரவு சென்னை திரும்பினார். பழைய வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே வந்தபோது, போலீசார் வண்டியை நிறுத்த கை காட்டினர். பிரேக் ஃபெயிலியரால் கார், கட்டுப்பாட்டை இழந்து, சப் இன்ஸ்பெக்டர் அன்புதாசன் உள்பட 7 பேர் மீது மோதியது. அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மோகன் மீது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து