மாவட்ட செய்திகள் பிப்ரவரி 06,2023 | 11:17 IST
தஞ்சாவூரில் தேசிய 11-வது பாரா வாலிபால் போட்டி 3-ம் தேதி முதல் 5 ந் தேதி நடந்தது. போட்டியில் 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணி முதலிடத்தையும், கர்நாடகா அணி இரண்டாமிடத்தையும், பிடித்தன. ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி இரண்டாமிடத்தையும், பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
வாசகர் கருத்து