சிறப்பு தொகுப்புகள் பிப்ரவரி 06,2023 | 12:03 IST
தமிழக அரசின் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மொத்தம் 4 பிஏக்கள். 2 பேர் அரசியல் விஷயங்கள் டீல் பண்ண , 2 பேர் பெர்சனலா இருக்காங்க. இவர்கள்ல சீனியர் பிஏ ஒருத்தர் இருக்கார். அவரோட பிரதாபாங்கள் தான் இப்ப பாப்புலர். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில வேலை செய்றவங்கள பத்தி உயர் அதிகாரிகளுக்கு மொட்டை பெட்டிஷன் போடுறதே இவர் முழு நேர வேலையா செஞ்சிட்டு இருக்காராம். அப்றமா, அந்த புகார் மேல நடவடிக்கை எடுக்காம நான் பாத்துக்குறேனு சொல்லி, வேண்டிய காரியங்களை சாதிச்சுக்கிறார். நான் மத்த அமைச்சர்களின் பிஏ மாதிரி கிடையாது. முதல்வர் குடும்பத்தில் இருந்து நேரடியா நியமிக்கப்பட்டவனாக்கும். யார் நெனச்சாலும் என்னை அசைக்க முடியாது'ன்னு கெத்தா பேசி, துறை அதிகாரிகளையே அலற விடுறாராம்.
வாசகர் கருத்து