மாவட்ட செய்திகள் பிப்ரவரி 06,2023 | 12:45 IST
திருப்பூர் அரிசிக்கடை வீதியில் சாலையை மறித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக ஸ்ரீவீர ராகவப்பெருமாள் கோவில் முன் தி.க. பொதுக்கூட்ட மேடை அமைத்ததால், அவ்வழியாக சென்றுவர முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். பெருமாளை தரிசிக்க வந்த பக்தர்கள், கோவிலுக்கு செல்ல முடியாமலும் தைப்பூசத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பூ மார்க்கெட் சென்றுவர முடியாமல், திரும்பிச் சென்றனர். பக்தர்கள் சிரமத்தை உணர்ந்து, இனிமேல் அரிசிக்கடை வீதியில் பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்
வாசகர் கருத்து