மாவட்ட செய்திகள் பிப்ரவரி 06,2023 | 21:15 IST
ஆர்ச்சரி என்னும் வில்வித்தை ஒரு ஒலிம்பிக் விளையாட்டு. இந்த விளையாட்டு மிகவும் பாதுகாப்பாக தனி நபர் திறமையை வெளிப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் இதை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததும் இதை கற்க அதிக செலவு ஆகும் என்ற தவறான எண்ணமே உள்ளது. ஆனால் உண்மையில் மற்ற தனிநபர் சார்ந்த விளையாட்டுகளை ஒப்பிடுகையில் செலவினம் மிகவும் குறைவு. தேசிய அளவில் சமீபத்தில் நடந்த வில்வித்தை போட்டியில் தமிழகம் சார்பாக 9 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கீர்த்தி மற்றும் பிரணவ், காம்பௌண்ட் பிரிவில் தருண் சுந்தர், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சக்தி கிஷோர் மற்றும் ரித்திகா கலந்து கொண்டுனர்.
வாசகர் கருத்து