மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 12:13 IST
ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரியா (36). இவர் தனது குழந்தைகளை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். மீண்டும் ஊர் திரும்ப அரசு பஸ்சில் ஏறியுள்ளார். பஸ்சில் வாழைப்பந்தல் செல்ல ஜெயப்பிரியா மட்டும் இருந்ததால் பஸ் அங்கு போகாது என கூறி ஜெயப்பிரியா ஆரணியில் இறக்கி விடப்பட்டார். இந்நிலையில் சோர்வால் ஜெயப்பிரியா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை அறிந்த வாழைப்பந்தல் கிராம மக்கள் வாழைப்பந்தல் வந்த 3 அரசு பஸ்களை சிறைப்பிடித்தனர். போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இது போன்று நடைபெறாது என உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம பொதுமக்கள் கலைந்தனர். இதனால் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து