மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 14:52 IST
உடுமலையில் கோடை வெயில் சீசனை எதிர்பார்த்து தர்பூசணி சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் தர்ப்பூசணி சாகுபடி நடக்கிறது. சொட்டுநீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தால் விளைச்சல் அமோகமாக உள்ளது. எனினும் சீசன் துவங்காத நிலை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக விலை குறைந்து வருகிறது. கிலோ வெறும் 7 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்கின்றனர். நடவு செலவு, உரம், சம்பளம் மற்றும் போக்குவரத்து செலவு உள்ளிட்டவைகளை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தர்ப்பூசணியை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு மறு உழவு செய்யும் நிலை உள்ளது.
வாசகர் கருத்து