மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 15:24 IST
மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகாக்களில் சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சேதமடைந்தன. அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஹெக்டர் ஒன்றுக்கு தமிழக அரசு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் அறிவித்தது. இந்நிலையில் விவசாயிகள் சங்கம் சார்பில் ரூ. 35 ஆயிரம் வழங்கிட வேண்டும். 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி பஸ் ஸ்டாண்ட் எதிரே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது
வாசகர் கருத்து