மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 16:53 IST
பந்தலூர் அருகே பிதர்காடு அரசு துவக்கப் பள்ளியில் 150 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு காலை சத்துணவு வழங்குவதில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா, தலைமை ஆசிரியர் ரீத்தா முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கண்ணன், துணைத் தலைவர் சிவகுமார், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி நிஷாத், சமூக ஆர்வலர் சங்கீதா மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். காலை சத்துணவு சமைக்க நெய், முந்திரி பருப்பு, எண்ணை உள்ளிட்ட பொருட்கள் குறைவாகவும், மாணவர் ஒருவருக்கு காய்கறி செலவாக வெறும் 50 காசு வழங்குவதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு சமையல் ஊழியர்கள் பரிதவித்து வருவதாக மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திவ்யா, கோகிலா தெரிவித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளில் சத்தான காலை உணவு வழங்க கூடுதல் நிதி வழங்க கலெக்டரிடம் வலியுறுத்துவது என முடிவு செய்தனர். காய்கறி செலவை ஊராட்சி தலைவர் ஏற்றுக் கொண்டார். மாணவர்களுக்கு தரமான, சத்தான காலை டிபன் வழங்க பெற்றோர் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து