மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 18:20 IST
தொழுகையை முடித்து திரும்பிய போது சோகம் நீலகிரி மாவட்டம் குன்னூர் உமரி காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கனி, வயது 60. 'ஸ்டாம்ப் வென்ட்டர்' (stamp vendor) நிறுவனம் நடத்தி வந்தார். நிறுவனம் அருகே பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு ரோட்டோரம் நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த பஸ்சின் பின் டயரில் சிக்கி தலை நசுங்கி ஸ்பாட்டிலேயே பலியானார். கல் தடுக்கி விழுந்தாரா அல்லது தலைசுற்று ஏற்பட்டு விழுந்தாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என போலீசார் கூறினர். பஸ் டிரைவர் சிவக்குமாரிடம் விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து