மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 18:28 IST
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் கன மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் முழ்கியது. விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு அரசு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் , உளுந்து, கடலைப் பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி, நீடாமங்கலம் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
வாசகர் கருத்து