மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 00:00 IST
சேலம் மாவட்டம், காவேரிபுரத்தை சேர்ந்த விவசாயி சிங்காரவேலுவின் மகன் தட்சிணாமூர்த்தி. 20. பாலிடெக்னிக்கில் மெக்கானிக் படித்துள்ளார். இவர், சிறுதானியங்களை நடவு செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார். பெட்ரோல் மூலம் இயங்கும் இந்த கருவி மூலம் கம்பு, சோளம், ராகி ஆகிய சிறுதானியங்களை விதைக்க முடியும். வாழை போன்ற மரங்களுக்கு இடையேயும் பயிர் நடவு செய்யும் வகையில் இவர் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
வாசகர் கருத்து