மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 00:00 IST
சித்தம்பலம், பல்லடம் வழியாக கணபதிபாளையம் வரை செல்லும் அரசு டவுன் பஸ்ஸில் நேற்று மாணவ, மாணவிகள் பயணித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் 15 மாணவிகளை கேத்தனூரிலேயே கண்டக்டர் இறக்கிவிட்டு சென்றார். இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்தே வந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் புள்ளியப்பம் பாளையத்தில் இன்று பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார், அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து