மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 13:05 IST
தமிழகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பனை விதையை ஊன்றி பனைமரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், பைங்காநாடு கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட பனை மரங்களை திமுகவினர் அனுமதியின்றி வெட்டினர். மக்கள் திருமக்கோட்டைபோலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து