மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 15:10 IST
திருச்சியில் வயலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி நடக்கிறது. பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியன. மிஷின் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கை அறுவடை மட்டுமே செய்ய இயலும் என்பதால் செலவு அதிகம். மகசூல் பாதித்து கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து