மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 15:28 IST
பந்தலூர் அருகே குந்தலாடி, ஓர்கடவு பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் ஒற்றை யானை நடமாடுகிறது. தானிமூலா பகுதிக்கு வந்த யானை தென்னை, வாழை மரங்களை முறித்துப்போட்டது. வனத்துறையினர் விரட்ட முயன்ற போது, அவர்களது வாகனத்தையும் சேதப்படுத்தி அப்பகுதியிலேயே சுற்றி வருகிறது. தெருவிளக்குகள் எரியாததால், இரவில் யானை நடமாட்டத்தை அறிய முடியாத நிலை உள்ளது. வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து