மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 18:13 IST
'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் மற்றும் தேனி ஆனந்தம் சில்க்ஸ் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மெகா வினாடி வினா இறுதி போட்டி மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் பிரமாண்டமாக நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 175 பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இப்போட்டியில் விருதுநகர் காரியாபட்டி நோபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 'டுவின்ஸ்' மாணவர்கள் கிரோஷிக், ஹிரோபின் முதலிடம் வென்றனர்.
வாசகர் கருத்து