மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 18:31 IST
திருப்பூர் உழவர் சந்தையையொட்டி காய்கறி வியாபாரிகள் மற்றும் புரோக்கர்கள் கடைகளை நடத்தி வருவதால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். வியாபாரிகள், புரோக்கர்களை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சப் கலெக்டர் உறுதியளித்தார்.
வாசகர் கருத்து