பொது பிப்ரவரி 08,2023 | 00:00 IST
சென்னை மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நல்லதம்பி, சென்னை ராயபுரம் தங்கம், கன்னியாகுமரி பாகன் ஆகிய மீனவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். 32 மீனவ கிராமங்களில் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழலையும், மீனவர்களையும் பாதிக்கும் திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து