மாவட்ட செய்திகள் பிப்ரவரி 09,2023 | 11:38 IST
திருத்தணி ஆறுமுகசாமிகோயில் தெருவை சேர்ந்த பாபுவின் மகன் கார்த்தி. 11-ம் வகுப்பு மாணவர். இன்று காலை மோட்டார் சைக்கிளில் நண்பன் வீட்டுக்கு போனார். திருத்தணி ரவுண்டானா அருகில் சென்றபோது, எதிரில் வேகமாக வந்த லாரி மோதியது. படுகாயத்துடன் கார்த்தி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து