மாவட்ட செய்திகள் பிப்ரவரி 09,2023 | 12:17 IST
கரூரில் தேசிய பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி பிப்ரவரி 8 முதல் 12 ஆம் தேதி வரை நடக்கிறது. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடக்கும் போட்டிகளில் 12 அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் சென்னை ரைசிங் ஸ்டார், சட்டிஸ்கர் சாய் ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதின. 69 க்கு 52 என்ற புள்ளி கணக்கில் சென்னை ரைசிங் ஸ்டார் வெற்றி பெற்றது. கேரள மின் வாரிய அணி, சென்னை எஸ்.ஆர்.எம் அணிகள் மோதிய போட்டியில் 66 க்கு 24 என்ற புள்ளி கணக்கில் கேரள மின் வாரிய அணி வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து