சிறப்பு தொகுப்புகள் பிப்ரவரி 09,2023 | 16:11 IST
நெல்லை, களக்காட்டில் ஒளிரும் கல் ஒன்றை வைரம் என ஏமாற்றி விற்பதாக தகவல் வந்தது. தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். மஞ்சுவிளை அருகே நின்றிருந்த 2 பேர் பேர் மீது சந்தேகம் வந்தது. அவர்களின் பையில் பெரிய கல் ஒன்று மின்னியது. ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் ஒருவர் மஞ்சுவிளையை சேர்ந்த சுசில்குமார், களக்காடு வன குழு தலைவராக இருந்தவர். அவரிடம் தான் கல் இருந்தது. மற்றொருவர் மேலப்பத்தையைச் சேர்ந்த வேல்முருகன். கல்லை வாங்க வந்தவர். பல லட்சம் ரூபாய் பணத்துடன் வந்திருந்தார். கல்லை பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து