மாவட்ட செய்திகள் பிப்ரவரி 13,2023 | 16:16 IST
கர்நாடகாவின் பன்னார்கட்டா சரணாலயத்தில் இருந்து யானைகள் இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு குழுக்களாக சுற்றி வருகிறது. வெலகலஹள்ளி கிராமம் நடேசன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 15 வயதுடைய ஆண் யானை உணவுக்காக முகாமிட்டது. மின் மோட்டாருக்கு சென்ற ஒயரை கடித்ததில் மின்சாரம் பாய்ந்து யானை பலியானது. விவசாயி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து