மாவட்ட செய்திகள் பிப்ரவரி 13,2023 | 17:00 IST
பாரதியார் பல்கலை 'பி' ஜோன் கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் தொடங்கியது. 20 அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை கல்லுாரி, கே.எஸ்.ஜி., அணிகள் மோதின. கே.எஸ்.ஜி., கல்லுாரி 'டாஸ்' வென்று பவுலிங் தேர்வு செய்தது. சிவபிரகாஷ், மாதவன் சிறப்பாக பந்து வீசினர். ராமலிங்க சவுடாம்பிகை அணியை 12.3 ஓவர்களில் 93 ரன்களுக்கு சுருட்டினர். அடுத்து களமிறங்கிய கே.எஸ்.ஜி., கல்லுாரி 10.4 ஓவர்களில் நான்கு விக்கெட் மட்டும் இழந்து 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
வாசகர் கருத்து