பொது பிப்ரவரி 14,2023 | 10:23 IST
புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரில் மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடந்தது. எதிர்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார். 1200 மாணவ -மாணவிகள் தொடர்ந்து அரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். சோழன் புக்ஆப் ரெக்கார்டு இந்த சாதனையை அங்கீகரித்தது. முதல்வர் ரங்கசாமி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 2020ல் சிலம்பாட்ட கழகத்தினர் 660 மாணவர்களை வைத்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இப்போது அவர்களே 1200 மாணவர்களை வைத்து அந்த சாதனையை முறியடித்தனர்.
வாசகர் கருத்து