மாவட்ட செய்திகள் பிப்ரவரி 15,2023 | 12:46 IST
கோவையில், கடந்த ஆண்டு கார் குண்டு வெடிப்பு நடந்தது. என்.ஐ.ஏ., புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம், ஆதம்கார்டன் பகுதியை சேர்ந்த இருவர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக வந்த புகாரினையடுத்து, இன்று , ஏழு பேர் கொண்ட புலனாய்வு போலீசார் திருவண்ணாமலை வந்தனர். சந்தேக நபரை பிடித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் மத்திய புலனாய்வு முகமை போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. விசாரணையின்போது, தமிழக போலீசார் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால், திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து