மாவட்ட செய்திகள் பிப்ரவரி 17,2023 | 13:37 IST
இளைஞர்கள் சிலர் மியூசிக் டூர் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி வரும் 18, 19 தேதிகளில் ஊட்டி தனியார் மண்டபத்தில் நடப்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தனர். 500, 400, 300 ரூபாய் டிக்கெட்டுகள் விற்பனை செய்து 10 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலில் ஈடுபட்டனர். அதே தேதியில் திருமணத்திற்காக வேறொருவர் மண்டபத்தை புக் செய்திருந்தார். இதை அறிந்த மண்டப நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர். மோசடியில் ஈடுபட்ட சித்தார்த், ரூகேஷ் பாபு, ஜாக்சன், மோனிஷ் குமார் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். போலி ஸ்டாம்ப் முத்திரை, டிக்கெட்டுகள் மற்றும் கார், டூவீலரை பறிமுதல் செய்து 4 பேரையும் சிறையிலடைத்தனர்.
வாசகர் கருத்து