மாவட்ட செய்திகள் பிப்ரவரி 20,2023 | 16:13 IST
ஊட்டி சுற்றுவட்டாரத்தில் காட்டெருமை நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவு, தண்ணீர் தேடி வரும் காட்டெருமைகள் நகர் பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளது. ஊட்டி வேல்வியூ பகுதியில் இருந்து ஒற்றை காட்டெருமை சவுத்வீக், சேரிங்கிராஸ் வழியாக கலெக்டர் அலுவலகம் வரை சென்றது. சிக்னலில் ஆம்புலன்ஸை வழி மறித்து சற்று நேரம் நின்றது. போக்குவரத்துக் காவலரை சற்று திரும்பி பார்த்தது, அங்கிருந்தவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. வனத்துறையினர் டூவீலர்களை சாலையின் நடுவே நிறுத்தி காட்டருமையை வனப்பகுதிக்கு விரட்டினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து