மாவட்ட செய்திகள் பிப்ரவரி 21,2023 | 22:13 IST
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையால் சேதம் அடைந்தன. தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 172 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. நேற்று வரை 80 ஆயிரத்து 772 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அரவை பணிகளுக்காக அனுப்பப்பட்டன. இருப்பினும் 35 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவைக்கு விரைந்து அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாசகர் கருத்து