மாவட்ட செய்திகள் பிப்ரவரி 22,2023 | 00:00 IST
காரைக்கால் பகுதியில் கஞ்சா புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஓடுதுறையில் கஞ்சா விற்ற தலத்தெருவை சேர்ந்த விஷ்ணு பிரியன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த ரஜினி சக்தி, ராமு(எ)ரகுராம் இருவரும் தரங்கம்பாடி கோழி(எ)ரஞ்சித்துடன் சேர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. பொறையாரில் ரஜினி சக்தியை கைது செய்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் கஞ்சா, செல்போனை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருக்கும் ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து