மாவட்ட செய்திகள் பிப்ரவரி 22,2023 | 13:34 IST
நெமிலி பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், ஓச்சேரி, பானாவரம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாளாக நெல் அறுவடை நடக்கிறது. அரசு சார்பில் கடந்த ஆண்டு விவசாயிகளிடம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்தனர். இந்த ஆண்டு அறுவடை தொடங்கி 15 நாளாகியும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து