மாவட்ட செய்திகள் பிப்ரவரி 23,2023 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 8 வது வார்டு பச்சாபளையத்தில் ரூ. 1.45 கோடி மதிப்பில் நவீன எரியூட்டு மின் மயானம் அமைக்க நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நவீன எரியூட்டு மின் மயானம், வீடுகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டால் நோய் தொற்று ஏற்படும் எனஅளவீட்டு பணிக்கு வந்த அரசு அதிகாரிகளை தடுத்து திருப்பி அனுப்பினர்.
வாசகர் கருத்து