மாவட்ட செய்திகள் பிப்ரவரி 24,2023 | 17:03 IST
நாகப்பட்டினம்-புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், நான்கு வழி சாலை பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. தமிழக எல்லையான மதகடிப்பட்டு அருகில் கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி விவசாயிகள் கையகப்படுத்திய தங்கள் நிலத்திற்கு உரிய தொகை வழங்கவும், அனுமதி இல்லாமல் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து