மாவட்ட செய்திகள் பிப்ரவரி 25,2023 | 17:16 IST
கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி ஒரு இடத்தில் மறைத்து வைத்து லாரிகளில் ஏற்றி விற்கப்படுவதாக லால்குடி போலீஸ் ADSP அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூக்கொல்லையில் போலீசார் ரெய்டு நடத்தினர். ஆற்றுக்குள் மலை போல் மணலை குவித்து வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட சேலம் கம்பம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் முருகன், சமயபுரம் பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். லாரி, பொக்கலைன் பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து