மாவட்ட செய்திகள் பிப்ரவரி 27,2023 | 16:22 IST
காரைக்கால் எம்.ஜி.ஆர் நகர் சுனாமி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிளிஞ்சல்மேடு விஜய்சென், எம்.ஜி.ஆர் நகர் பைத்துல் ரகுமானை கைது செய்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விஜய்சென் கொடுத்த தகவலை அடுத்து நாகையில் பதுங்கியிருந்த தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சதீஷ், சுரேஷ் இருவரை கைது செய்தனர். 2 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சா, 3 செல்போன், எடை கருவி, ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து