மாவட்ட செய்திகள் பிப்ரவரி 28,2023 | 11:51 IST
கோவை மாவட்டத்தில் நீலகிரி மலைத்தொடரின் அடிவார பகுதி உள்ளது இங்கு வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை சீசனால் வனத்தில் மரங்கள் காய்ந்து வரும் நிலையில் அங்குள்ள வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேற துவங்கியுள்ளன நேற்று இரவு முதல் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை ஓடந்துரை பகுதியில் உணவுக்காக வெளியேறிய காட்டு யானைகள் சாலை ஓரத்தில் உலா வந்தன. இதனை அந்த வழியாக சென்றவர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து பதிவிட்டனர். இரவு நேரத்தில் விலங்குகள் உலா வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது
வாசகர் கருத்து