மாவட்ட செய்திகள் பிப்ரவரி 28,2023 | 13:09 IST
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு காந்திநகர் ஆதி திராவிடர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கான மயானம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செல்லிக்கண்மாய் பகுதியில் உள்ளது. அங்கு செல்ல பாதை இல்லை. பிணத்துடன் வயல் வழியாக செல்கின்றனர். மயான பாதை கேட்டு 62 ஆண்டுகள் போராடியும் பயனில்லை. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கைக் குழந்தைகளுடன் பெண்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் மேலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. மேலூர் தாசில்தார் சரவணப் பெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. சாலை வசதி செய்து கொடுப்பதாக தாசில்தார் உறுதியளித்ததால் மறியலை கைவிட்டனர்.
வாசகர் கருத்து