மாவட்ட செய்திகள் பிப்ரவரி 28,2023 | 15:59 IST
நன்னிலம், நெம்மேலியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. நன்னிலம் சோத்தக்குடி திருக்கண்டீஸ்வரம் சன்னாநல்லூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய அடுக்கி வைத்தனர். திடீரென பெய்த சாரல் மழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. தார்ப்பாய்களை கொண்டு நெல் மூட்டைகளை மூடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்தால் மிகப் பெரிய பாதிப்பை சந்திப்போம் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து