மாவட்ட செய்திகள் மார்ச் 01,2023 | 11:58 IST
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. அதில் பேசிய அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி, அமைச்சர் நேரு தொகுதியில் மட்டும் ரோடு போடுவதாக குற்றம் சுமத்தினார். குறுக்கிட்ட திமுக மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், அமைச்சர் தொகுதியைப் பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை, என ஆவேசப்பட்டார். அம்பிகாபதியை திட்டி தீர்த்தார். அதிமுக கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்த், அனுஷியா மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அம்பிகாபதி முதுகில் கையை வைத்து திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம் வெளியே தள்ளி விட்டார். வார்டு பிரச்னைகள் குறித்து பேச விடாமல் தடுத்ததை கண்டித்து மூன்று கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
வாசகர் கருத்து